/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
/
மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
ADDED : செப் 15, 2025 12:57 AM
ஆவடி; ஆவடியில், காய்ச்சல் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, திடீரென உயிரிழந்தார்.
ஆவடி, நந்தவன மேட்டூர், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் மகள் மதுமிதா, 16; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி.
கடந்த 11ம் தேதி, சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளது எனக்கூறி மருத்துவம் பார்த்துள்ளனர்.
மறுநாள் காய்ச்சல் இல்லாததால், சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு, சிறுமிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, நாடி துடிப்பு குறைந்து வருவதாக கூறி, திருப்பி அனுப்பிய நிலையில், வீட்டுக்கு செல்லும் வழியில் சிறுமி நேற்று, பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.