/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஆண் நண்பரை கொன்ற தோழி கைது
/
வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஆண் நண்பரை கொன்ற தோழி கைது
வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஆண் நண்பரை கொன்ற தோழி கைது
வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஆண் நண்பரை கொன்ற தோழி கைது
ADDED : செப் 20, 2025 04:07 AM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே, வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆண் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த, அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இம்ரான் ஹூசைத், 31. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே, சென்னக்குப்பம் பகுதியில் வாடகைக்கு தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பரிதாபேகம், 31, என்பவர், கணவரை பிரிந்து, சென்னக்குப்பம் பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கமாகி உள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் ஹூசைத்துக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பரிதாபேகம் இம்ரான் ஹூசைத் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பரிதா பேகம், நேற்று முன்தினம் காலை, இம்ரான் ஹூசைத் அறைக்கு சென்றார். அங்கு துாங்கி கொண்டிருந்த இம்ரான் ஹூசைத் தை காய்கறி வெட்டும் கத்தியால், அவரது வயிறு, தலை மற்றும் தொடை பகுதிகளில் சரமாரியாக குத்தி கிழித்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இம்ரான் ஹூசைத் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இம்ரான் ஹூசைத், நேற்று காலை உயிரிழந்தார்.
ஒரகடம் போலீசார், பரிதாபேகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.