/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி கர்ப்பம் காதலனுக்கு 'போக்சோ'
/
சிறுமி கர்ப்பம் காதலனுக்கு 'போக்சோ'
ADDED : மே 15, 2025 12:20 AM
கொடுங்கையூர், கொடுங்கையூரைச் 16 வயது சிறுமி, சமீபத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளார். கடந்த 22ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித், 23, என்பவரை சிறுமி காதலித்து வந்ததும், குடும்பத்தினருக்கு தெரியாமல் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து, வியாசர்பாடியில் வசிப்பதும் தெரிய வந்தது. மேலும், சிறுமி தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். ரஞ்சித் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.