/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்பு பெயர் மாற்றம் ஜி.கே.வாசன் கண்டனம்
/
மின் இணைப்பு பெயர் மாற்றம் ஜி.கே.வாசன் கண்டனம்
ADDED : ஏப் 17, 2025 12:31 AM
சென்னை, 'பச்சையம்மன் கோவில் நிலத்தில், 40 ஆண்டுகளாக குடியிருக்கும், 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி கோவில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்' என, த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான வீடுகள், மனைகள், கடைகள் மற்றும் காலியிடங்களுக்கு வாடகையை நியாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடந்த 2007 மற்றும் 2010ல் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசு அறிவித்த அரசாணைகள்படி கோவில் நிலம் சம்பந்தமாக அறிவுறுத்திய வாடகையை, தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை, தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும், தமிழக அரசு சென்னை மவுண்ட்ரோடு, பச்சையம்மன் கோவில் நிலத்தில், 40 ஆண்டுகளாக குடியிருக்கும், 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி, கோவில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்து, குடியிருப்போரின் பெயரிலேயே மின் இணைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.