/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு
/
மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு
ADDED : ஜன 30, 2024 12:12 AM

ராயபுரம், சென்னை, செங்குன்றம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர் ராயபுரம் மண்டலத்தில், 10 ஆண்டுகளாக குப்பை லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, ராயபுரம் பழைய ஆட்டுத்தொட்டி சாலையிலுள்ள நகராட்சி மைதானம் அருகில், குப்பை லாரியில் குப்பை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த இருவர், லாரியின் முன்பக்க கண்ணாடியை கட்டை மற்றும் கல்லால் அடித்து நொறுக்கி உள்ளனர்.
உடனே சுரேஷ், மாநகராட்சி ஊழியர்கள் இருவருடன் சேர்ந்து, மர்ம நபர்களை பிடித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 22, ராஜி, 25, என தெரிந்தது. போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.