/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்ணாடி வளாகம், பட்டாம்பூச்சி கூரை தயாராகுது முல்லை நகர் பஸ் நிலையம்
/
கண்ணாடி வளாகம், பட்டாம்பூச்சி கூரை தயாராகுது முல்லை நகர் பஸ் நிலையம்
கண்ணாடி வளாகம், பட்டாம்பூச்சி கூரை தயாராகுது முல்லை நகர் பஸ் நிலையம்
கண்ணாடி வளாகம், பட்டாம்பூச்சி கூரை தயாராகுது முல்லை நகர் பஸ் நிலையம்
ADDED : நவ 24, 2025 03:08 AM

வியாசர்பாடி: வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம், 6.60 கோடி ரூபாய் செலவில், கண்ணாடி கட்டடம், பட்டாம்பூச்சி இறக்கை வடிவிலான பிரமாண்ட மேற்கூரை என, புதுப்பொலிவு பெறுகிறது.
வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம், 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு, கொளத்துார், பெரம்பூர், செம்பியம், அகரம், மாதவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முல்லை நகர் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி, படுமோசமான நிலைக்கு மாறியது. மழைக்காலங்களில் குளமாக மாறியது. பொதுமக்கள் நலன் கருதி, முல்லை நகர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, முல்லை நகர் பேருந்து நிலையத்தை, 6.60 கோடி ரூபாய் செலவில், முல்லை நகரில் புது பேருந்து நிலையம் கட்ட, சி.எம்.டி.ஏ., முடிவெடுத்தது.
இதற்கான பணிகளை, பெரம்பூர் எம்.எல்.ஏ., - ஆர்.டி.சேகர், 2024 மார்ச் மாதம் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். இதில், 90 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லை நகர் பேருந்து நிலையம், கண்ணாடி கட்டடத்திலான தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைகிறது. பட்டாம்பூச்சி இறக்கை வடிவிலான பிரமாண்ட மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், பேருந்து நிலைய பணியாளர்களுக்கான அலுவலக அறை, ஓட்டுநர், நடத்துநர்களுக்கான ஓய்வறை, பயணியர் காத்திருக்கும் இடம், தாய்மார்களுக்கு பாலுாட்டும் அறை என, அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது.
தற்போது பணிகள் விரைந்து நடந்து வரும் நிலையில், விரைவில் பணிகள் முடிந்து பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

