/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குளோபல் கோல்ஸ்' கால்பந்து போட்டி எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார் 'சாம்பியன்'

ADDED : ஜன 29, 2025 12:11 AM

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி இலக்குகள் அமைப்பு சார்பில், 'குளோபல் கோல்ஸ்' என்ற பெயரில் கால்பந்து போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலையில் நடந்தன.
போட்டியில், ஆண்களில் எட்டு கல்லுாரிகளும், பெண்களில் நான்கு கல்லுாரிகளும், 'லீக்' முறையில் மோதின.
அனைத்து, 'லீக்' சுற்றுகள் முடிவில், பெண்கள் பிரிவில், ஜேப்பியார் கல்லுாரி முதலிடத்தையும், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி இரண்டாமிடத்தையும், எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா மூன்றாம் இடத்தையும் வென்றன.
அதேபோல், ஆண்கள் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், ரத்தினம் கல்லுாரி இரண்டாமிடத்தையும், நாசரத் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.