/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டிற்கே சென்று மூதாட்டிக்கு பணம் வினியோகம்
/
வீட்டிற்கே சென்று மூதாட்டிக்கு பணம் வினியோகம்
ADDED : ஜன 15, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த, 76 வயது மூதாட்டி ஒருவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக படுக்கையில் படுத்தபடியே இருந்து வருகிறார்.
அவரால், ரேஷன் கடைக்கு சென்று, பொங்கல் தொகுப்பு பெற முடியாத நிலைமை இருந்தது. இதையறிந்த ரேஷன் கடை ஊழியர்கள், மூதாட்டியின் வீட்டிற்கே சென்று, அவருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினர்.