/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வைர நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வைர நகை திருட்டு
ADDED : ஜூலை 15, 2025 12:26 AM
சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குகேஷ், 32. கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, அதலிருந்த, 5 சவரன் நகை, 2 வைர தோடு, ஒரு பிளாட்டினம் தோடு, 1.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்படி, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.