/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீ விபத்தில் ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
/
தீ விபத்தில் ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஜன 25, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம்சுந்தர், 56; சி.டி.எச்., சாலையில், 'காதிம் புட்வேர்' எனும் பெயரில் ஷூ, செருப்பு, பை விற்பனை கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 4:30 மணியளவில், கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், கடை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஆவடி மற்றும் அம்பத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த ஷூ, செருப்பு, பை உட்பட, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

