நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துரித உணவு வகைகளில் மட்டுமின்றி, தமிழக உணவுகளிலும் கோஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.தற்போது தமிழகத்தில் கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலும் விளைச்சல் களைகட்டி வருகிறது.
இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தைக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில், கோஸ் விற்பனைக்கு வருகிறது. மொத்த விலையில், ஒரு கிலோ கோஸ் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பீட்ரூட் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.