sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

272 கி.மீ., மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு அரசு ஒப்புதல்

/

272 கி.மீ., மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு அரசு ஒப்புதல்

272 கி.மீ., மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு அரசு ஒப்புதல்

272 கி.மீ., மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு அரசு ஒப்புதல்


ADDED : செப் 23, 2025 01:25 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளில், 272 கி.மீ., மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பெருநகரில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, போக்குவரத்து குழுமமான, 'கும்டா' ஏற்படுத்தப்பட்டது. இதன் இரண்டாவது குழும கூட்டம், தலைமை செயலகத் தில், முதல்வர் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

'கும்டா' உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளில், சென்னை பெரு நகர் பகுதியில், 5,900 சதுர கி.மீ., பரப்பளவுக் கான போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைக்கும் திட்டம், இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, சென்னை பெருநகரில் 25 ஆண்டுகளில், 272 கி.மீ., தொலைவுக்கு புதிதாக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். தற்போது, 54 கி.மீ., தொலைவில் மெட்ரோ ரயில் சேவை பயன் பாட்டில் உள்ளது.

இரண்டாம் கட்டமாக, 116 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதையடுத்து, 3, 4வது கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கும்போது, சென்னையில், 450 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் இருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக, தற்போது, 3,500 ஆக உள்ள மாநர பேருந்துகள் எண்ணிக்கை, 2030ம் ஆண்டு, 6,300 ஆக அதிகரிக்கப்படும்.

தெற்கு ரயில்வே சார்பில், 152 கி.மீ., தொலைவுக்கு புதிய புறநகர் ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

குறிப்பாக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 4வது வழித்தடத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us