/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பஸ் நடத்துனர் மயங்கி விழுந்து பலி
/
அரசு பஸ் நடத்துனர் மயங்கி விழுந்து பலி
ADDED : அக் 15, 2024 12:50 AM

திருத்தணி, ஆந்திர மாநிலம் நகரி பகுதியைச் சேர்ந்தவர் குப்பைய்யா, 53; திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை நடத்துனர்.
நேற்று அதிகாலை, திருத்தணி - கோணசமுத்திரம் வரை செல்லும் அரசு பேருந்து '27' என்ற தடம் எண்ணில், பணியில் இருந்தார். காலை 10:30மணிக்கு திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து கோணசமுத்திரம் நோக்கி புறப்பபட்டது.
அகூர் அடுத்த, நத்தம் நிறுத்தம் அருகே சென்ற போது, குப்பைய்யா திடீரென மயங்கி, பேருந்தினுள் விழுந்தார்.
ஓட்டுனர் அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், நடத்துனர் குப்பையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.