ADDED : ஜூலை 11, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி, பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த தம்பதி, அதே பகுதியை சேர்ந்த நபரிடம் இருந்து, ஏரியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு இடம், 300 சதுர அடியை, 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் வீடு கட்டி, பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை முடக்கியதாக, அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிக்க முயன்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளரான பெண், இயந்திரம் முன் படுத்து, கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திய பின் வீட்டை இடித்து அகற்றினர்.