/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.80 கோடி மதிப்பிலான அரசு நிலம் மணலியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
ரூ.80 கோடி மதிப்பிலான அரசு நிலம் மணலியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ரூ.80 கோடி மதிப்பிலான அரசு நிலம் மணலியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ரூ.80 கோடி மதிப்பிலான அரசு நிலம் மணலியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 25, 2025 01:22 AM

மணலி: தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட, 80 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.3 ஏக்கர் அரசு நிலத்தைச் சுற்றி, தனியார் நிறுவனம் மீண்டும் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மணலி, சி.பி.சி.எல்., நகர் எதிரே நெடுஞ்செழியன் தெருவில், கண்ணாடி நுாலிழை தயாரிக்கும், எஸ்.ஆர்.எப்., எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், அரசுக்கு சொந்தமான மயானம், வண்டிப்பாதை மற்றும் வாய்க்கால் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது.
வருவாய் துறை ஆணவங்களை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், அரசு இடம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, 2023 ஜூலை 11ல், நிறுவனத்தின் சுற்றுச்சுவரை இடித் து அகற்றி, இடத்தை மீட்டனர். மாநகராட்சியின் 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்ப ட்டது.
சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார கமிஷனராக இருந்த சிவகுருபிரபாகரன் உத்தரவுப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழ் உட்பட பல்வேறு நாளிதழ்களிலும் செய்தி வெளியானது.
இந்நிலையில், மீட்கப்பட்ட நிலத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், நிறுவனம் சார்பில் மீண்டும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகாலில் பிரச்னை ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்வர் என்பதுகூட புரியாத புதிராக உள்ளது. ஆக்கிரமிப்பு என, சுட்டிக்காட்டி மீட்கப்பட்ட நிலத்தை, தனியார் நிறுவனம் மீண்டும் எப்படி சுற்றுச்சுவர் எழுப்பியது. ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகளே துணை போனரா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வருவாய் துறை ஆவணங்கள் தெளிவாக ஒப்படைக்கப்படவில்லை. இதனால், நிலத்தை முழுமையாக மீட்பதில் சிக்கல் உள்ளது' என்றனர்.