/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டி வரும் 29ல் துவக்கம்
/
மாநில வாலிபால் போட்டி வரும் 29ல் துவக்கம்
ADDED : ஆக 24, 2025 11:03 PM
சென்னை; தஞ்சாவூரில் மாநில அளவில், 19 வயதுக்கு உட்பட்ட, பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கும், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி, வரும் 29ம் தேதி துவங்க உள்ளது.
'தமிழன்னை வாலிபால் கிளப்' சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட, பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கும், 3வது மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, தஞ்சாவூர், ஒரத்தநாடு தமிழன்னை கிளப் மைதானத்தில், வரும் 29ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
ஆடவர் பிரிவில், சென்னையின் டான் பாஸ்கோ பள்ளி, வேலம்மாள் பள்ளி அணி உட்பட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. மகளிர் பிரிவில் எஸ்.டி.ஏ.டி., உட்பட நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
போட்டி லீக் கம் நாக் அவுட் முறையில் நடக்க உள்ளது. ஆடவர் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 20,000 ரூபாய்; இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 17,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.
மகளிர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 13,000 ரூபாய்; இரண்டாம் இடத்திற்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.