/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அரசாணை வெளியீடு இழுபறி
/
திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அரசாணை வெளியீடு இழுபறி
திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அரசாணை வெளியீடு இழுபறி
திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அரசாணை வெளியீடு இழுபறி
ADDED : டிச 21, 2025 04:34 AM
சென்னை: திருப்போரூர் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுக்கான அரசாணை வெளியிடுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னையின் வருங்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி திருப்போரூரில், 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்தேக்கம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இப்பணிக்கு 471 கோடி ரூபாய் தேவை.
இந்த புதிய நீர்த்தேக்கம் வாயிலாக, 1.60 டி.எம்.சி., மழைநீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தையும் நீர்வளத்துறையினர் தேர்வு செய்துள்ளனர்.
கட்டுமான பணிகளை இம்மாதம் 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பதாக இருந்தது, கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
திட்டத்திற்கான நிதியை உறுதி செய்து, நிதித்துறை இன்னும் அரசாணை வெளியிடவில்லை. இதனால், கட்டுமான பணிகளை துவங்க முடியாமல், நீர்வளத்துறையினர் தவித்து வருகின்றனர்.

