/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி
/
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி
ADDED : அக் 28, 2025 12:43 AM

வியாசர்பாடி: ''எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க, அரசு தயாராக உள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
அடுத்த 10 நாள்களுக்கு பெரிய மழை இருக்காது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க, தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
சமூகவலைதளங்கள் வாயிலாக அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடசென்னையில், 18 கால்வாய்கள், 13 குளங்கள் உள்ளிட்ட 331 கி.மீ., துார்வாரப்பட்டு, 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.