/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
/
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : டிச 05, 2025 07:08 AM

மேடவாக்கம்: பள்ளி மாணவ - மாணவர்களிடையே, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதற்கான தேர்வு, கடந்த அக்., 11ல் நடந்தது; 70,508 மாணவ - மாணவியர், இந்த தேர்வை எழுதினர்.
இதன் முடிவு கடந்த 1ல் வெளியிடப்பட்டது. இதில், மேடவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களான யோகரம்யா - 98, யாக்னா - 96, வின்சென்ட் செல்வா - 90 மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பட்டியலில், செங்கல்பட்டு மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
இம்மாணவ - மாணவியருக்கு இரு ஆண்டுகளுக்கு, மாதம்தோறும் தலா 1,500 வீதம் 36,000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசால் வழங்கப்படும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.