/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீச் வாலிபால் அரசு பள்ளி முதலிடம்
/
பீச் வாலிபால் அரசு பள்ளி முதலிடம்
ADDED : டிச 07, 2024 12:07 AM
சென்னை,
அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கான இறுதிப்போட்டியில், திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி மற்றும் திருவொற்றியூர் இந்துஜா மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின.
போட்டியின் முடிவில் 15 - 12, 15 -- 13 என்ற புள்ளிக்கணக்கில், திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.
அதேபோல், மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் செயின்ட் மேரிஸ் மற்றும் வியாசா வித்யாலயா பள்ளிகள் மோதின. அதில், 15- - 12, 15 - -13 என்ற கணக்கில் செயின்ட் மேரிஸ் பள்ளி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றது.