/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழலில் பேரன் தற்கொலை பாட்டி மரணத்தில் மர்மம்
/
புழலில் பேரன் தற்கொலை பாட்டி மரணத்தில் மர்மம்
ADDED : மே 13, 2025 12:29 AM
புழல், புழல், சிவராஜ் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கிஷோர், 24; ஆட்டோ ஓட்டுனர். பழைய குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன், அவரது தாய் சரஸ்வதி திருவிழாவிற்காக வேலுார் சென்றார்.
இந்நிலையில், நேற்று முற்பகல் 11:00 மணியளவில், கிஷோர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
புழல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை கிஷோர் வீட்டருகே உள்ள முட்புதரில் துர்நாற்றம் வீசுவதாக, பகுதிவாசிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கிஷோரின் பாட்டி கமலம்மாள், 82, என தெரியவந்தது.
புழல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.