/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கிரிக்கெட் போட்டி கிரின் பீல்ட் அணி சாம்பியன்
/
சென்னை கிரிக்கெட் போட்டி கிரின் பீல்ட் அணி சாம்பியன்
சென்னை கிரிக்கெட் போட்டி கிரின் பீல்ட் அணி சாம்பியன்
சென்னை கிரிக்கெட் போட்டி கிரின் பீல்ட் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 13, 2025 09:19 PM

சென்னை:ஒயிட் ஜெர்சி அகாடமி சார்பில், சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆவடியின் ஒயிட் ஜெர்சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், ஏழு அணிகள் பங்கேற்றன. இதில், கிரின் பீல்ட் கிளப் மற்றும் ஜாக்ஸ் கிளப் அணிகள், இறுதி போட்டியில் நேற்று முன்தினம் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கிரின் பீல்ட் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்களின் அசத்தலான ஆட்டத்தால், 9.5 ஓவருக்கு 55 ரன் கிடைத்தது. போட்டியின் 7.4 ஓவரில் 21 ரன்னில் திருநாராயணன் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து, வசந்த் 29 ரன்னில் வீழ்ந்தார்.
பின் வந்த விக்னேஷ், பிரஜீத் ஜோடி அணிக்கு வலு சேர்த்தது. 23.4வது ஓவரில் குணா வீசிய பந்தில் விக்னேஷ் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு விக்னேஷ், அணிக்கு ரன்களை குவித்து வந்தார். அவர் 64 பந்துக்கு சதம் அடித்தார். 48.1 ஓவர் முடிவில் 329 ரன்கள் அடித்து, கிரின் பீல்ட் அணி ஆல் - அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய ஜாக்ஸ் அணியின் துவக்க வீரர்கள் தடுமாற்றம் அளித்தனர். அஜித் 6, ஹர ஹரன் 13, சிவபிரகாஷ் 9 ரன்களுடன், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜாக்ஸ் அணிக்கு குணா 48, கார்த்திக் 54 ரன் என, அரை சதம் அடித்து ஆறுதல் தந்தனர். பின், களமிறங்கிய அருண் 77 பந்துக்கு 91 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஓவர் 46.4 முடிவில் ஜாக்ஸ் அணி ஒன்பது விக்கெட்டை இழந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. புள்ளி பட்டியலில் அதிக புள்ளி பெற்ற கிரின் பீல்ட் அணி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.