ADDED : டிச 04, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, நியூ மெகசின்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், 62. இவர், வியாசர்பாடி, டி.எச்., சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2ம் தேதி கடையை திறக்க வந்துபோது, கடையின் பின்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கல்லாப்பெட்டியில் இருந்த 5,000 ரூபாய் மற்றும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தன.
வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், எம்.கே.பி.நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரவணன், 40, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.