/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவ கூட்டுறவு பண்டக சாலை கட்டுமான பணிக்கு பூமி பூஜை
/
மீனவ கூட்டுறவு பண்டக சாலை கட்டுமான பணிக்கு பூமி பூஜை
மீனவ கூட்டுறவு பண்டக சாலை கட்டுமான பணிக்கு பூமி பூஜை
மீனவ கூட்டுறவு பண்டக சாலை கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : டிச 12, 2025 05:33 AM

ராயபுரம்: ராயபுரத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், மீனவ கூட்டுறவு பண்டக சாலை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சென்னை மாநகராட்சியின் 50வது வார்டான, ராயபுரம் பனைமரத்தொட்டி தெருவில், 1,800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு, ஏற்கனவே இருந்த இரண்டு கூட்டுறவு ரேஷன் கடைகள், 'மிக்ஜாம்' புயலில் சேதமடைந்தன.
இதனால், 1,820 குடும்ப அட்டைதாரருக்கான தற்காலிக கூட்டுறவு கடை, அரத்துான் சாலையில் அமைந்துள்ளது. பொருட்களை வாங்க அப்பகுதி மக்கள், நீண்ட துாரம் நடந்து செல்கின்றனர்.
இதற்காக தி.மு.க., - - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிதாக கூட்டுறவு பண்டக சாலை கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, ராயபுரம் தொகுதிக்கு, உட்பட்ட பள்ளிகளில் பயிலும், 839 மாணவ - - மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

