/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., சாலையில் விரிசல்: போக்குவரத்து மாற்றம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் விரிசல்: போக்குவரத்து மாற்றம்
ஜி.எஸ்.டி., சாலையில் விரிசல்: போக்குவரத்து மாற்றம்
ஜி.எஸ்.டி., சாலையில் விரிசல்: போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 21, 2024 12:17 AM

தாம்பரம், தாம்பரம், இரும்புலியூர் பாலத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை, இருவழிப்பாதையாக உள்ளதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது.
நீண்டகால பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதியினர் பயன்படுத்தும் வகையில், வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இச்சுரங்கப்பாதை, 'ப்ரீகாஸ்ட்' எனும் ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில் அமைக்கப்படுகிறது. இந்த முறையில், 195 அடி நீளத்திற்கு, ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.
இரு பெட்டிகள் பொருத்தப்பட்டு, மூன்றாவது பெட்டியை நகர்த்தும் பணி நடந்து வருகிறது.
சிமென்ட் பெட்டியை நகர்த்துவதால், மேற்பகுதியில், தாம்பரம் - பெருங்களத்துார் மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று தாம்பரத்தில் இருந்து செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள், பழைய சாலை வழியாகவும், மற்ற வாகனங்கள் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக போடப்பட்ட சாலை வழியாகவும், இரு பகுதிகளாக பிரித்து அனுப்பப்படுகின்றன.
தவிர, சென்னை புறவழிச்சாலை வழியாக வரும் கனரகவாகனங்கள், மதுரவாயலில் இருந்து, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன. வண்டலுார் - தாம்பரம் மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.