/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11வது மாடியில் இருந்து விழுந்து காவலர் பலி
/
11வது மாடியில் இருந்து விழுந்து காவலர் பலி
ADDED : அக் 19, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்தவர் செல்வமுருகன், 29. நேற்று மதியம், 2:00 மணிக்கு காவலர் குடியிருப்பின், 11வது தளத்தில், தண்ணீர் தொட்டி வால்வு மூட, அதன் மீது ஏறியுள்ளார்.
கால் இடறி, அங்கிருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எழும்பூர் போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

