/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் கும்மிடி வாலிபருக்கு சிறை
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் கும்மிடி வாலிபருக்கு சிறை
ADDED : நவ 10, 2024 09:26 PM
புழல்:புழல் அடுத்த செங்குன்றம் - திருவள்ளூர் சாலை, ஏரிக்கரை அருகே, போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரிக்கரை அருகே, கையில் பெரிய பை வைத்திருந்த நபரை சந்தேகத்தின்படி விசாரித்தனர்.
அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அந்த நபர் கும்மிடிப்பூண்டி, தேர்வழி, தபால் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ், 21, என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, அதை விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.