UPDATED : அக் 17, 2026 05:50 PM
ADDED : அக் 17, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
கண்ணகி நகர்: கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆறு பேரை, குண்டர் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 36. இவர் மீது, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 29 வழக்குகள் உள்ளன. கண்ணகி நகரைச் சேர்ந்தோர் ராஜேஷ், 24, அருண்குமார், 25, விஜய், 22, முத்து, 30, விஷ்ணு, 23.
இவர்கள் ஒவ்வொருவர் மீதும், கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 5 முதல் 10 வழக்குகள் உள்ளன. தவிர, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்ணகி நகர் போலீசார், ஆறு பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
