/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது குண்டாஸ்
/
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது குண்டாஸ்
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது குண்டாஸ்
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது குண்டாஸ்
ADDED : ஏப் 24, 2025 12:11 AM
மடிப்பாக்கம், மடிப்பாக்கம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துமதி, 45. உணவு டெலிவரி ஊழியர். இவர், இரு வாரங்களுக்கு முன், வாடிக்கையாளருக்கு உணவு வழங்க, பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த இருவர், 'லிப்ட்' கேட்டுள்ளனர். இவர் தர மறுக்கவே, இருவரும் கத்தியை காட்டி மிரட்டி, முத்துமதியிடம் பணம் பறித்து தப்பியோடினர்.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்து விசாரித்த நடிப்பாக்கம் போலீசார், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலையிமையில், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில், மடிப்பாக்கம், சீனிவாசன் நகரை சேர்ந்த பிரசாந்த், 25, சீனு, 24, ஆகியோர் சம்பவத்தில் ஈருபட்டது. அவர்கள் சகோதரர்கள் தெரியவந்தது.
இவர்களிடம் மேலும் விசாரித்ததில், இவர்கள் மீது, தலா இரு கஞ்சா வழக்குகள், ஒரு அடிதடி வழக்கு, வீடு புகுந்து திருடுவது உட்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதால், அவர்களை குண்டாஸ் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.