ADDED : டிச 09, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்து நகரில் உள்ள ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 5 கிலோ மாவா, 2 கிலோ சீவல் பாக்கு, ஜர்தா மற்றும் மிக்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பழைய குற்றவாளியான ராஜேஷ்குமார், 34, என்பதும், ஓட்டேரி, திடீர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் இருந்து பொருட்கள் வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.