ADDED : டிச 15, 2024 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராட்வே, :சென்ட்ரல், பிராட்வே, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில், தெருவோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரம் உள்ள முதியவர்கள் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோருக்கு, முடி திருத்தம் செய்து, புதிய ஆடை அணிவித்து, உணவு வழங்கும் பணியை, தணல் தன்னார்வ அமைப்பினர் மேற்கொண்டனர். இந்த பணியை பார்த்த பொதுமக்கள் பலரும், பாராட்டி சென்றனர்.
இதுகுறித்து, தணல் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுதும் உள்ள ஆதரவற்றோர், சாலை ஓரங்களில் சுற்றித்திரியும் மனநலம் குன்றியவர்கள், பிச்சைக்காரர்கள், உடல் ஊனமுற்றோருக்கு கண்டறிந்து, முடி திருத்தம் செய்கிறோம். புது உடை, உணவு வழங்கி வருகிறோம். இந்த பணிகளை ஆறு மாதங்களாக செய்து வருகிறோம்' என்றனர்.

