/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டப உரிமையாளர் மின்சாரம் பாய்ந்து பலி
/
மண்டப உரிமையாளர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : மார் 22, 2026 10:33 PM
கே.கே.நகர்: கே.கே.நகரில், திருமண மண்டப உரிமையாளர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கே.கே.நகர், லட்சுமணசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன், 69; மேற்கு மாம்பலத்தில் பாரதி ராம் மஹால் என்ற திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார்.
இவரது இரு மகன்கள் அமெரிக்காவில் பணிபுரிவதால், வீரராகவனின் மனைவி மல்லிகா, மகன்களை பார்க்க அமெரிக்கா சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த வீரராகவன், நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரது வலது கையில் தோல் உரிந்து காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

