/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகளாக மாறிய மகிழ்ந்த குடியிருப்புவாசிகள் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் நெகிழ்ச்சி
/
குழந்தைகளாக மாறிய மகிழ்ந்த குடியிருப்புவாசிகள் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் நெகிழ்ச்சி
குழந்தைகளாக மாறிய மகிழ்ந்த குடியிருப்புவாசிகள் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் நெகிழ்ச்சி
குழந்தைகளாக மாறிய மகிழ்ந்த குடியிருப்புவாசிகள் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் நெகிழ்ச்சி
ADDED : ஜன 27, 2025 03:37 AM

ஆவடி:அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை ஒருங்கிணைத்து, 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நம் நாளிதழ் நடத்தி வருகிறது. இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது.
அந்த வரிசையில், ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள 'ஓம் சக்தி சாந்தா டர்வர்ஸ்' அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
நிகழ்ச்சியை, 'கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், நிசான், போகா ஈவென்ட்' உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்தின.
இதனால், குடியிருப்பு பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில், ரங்கோலி கோலப்போட்டி, சிறுவர்களுக்கான மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஆடல், பாடல் நிகழ்ச்சி, விளையாட்டு, மேஜிக் ஷோ, உறியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். குறிப்பாக, பெரியவர்கள் குழந்தைகளாக மாறிய தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்படி ஒரு நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் ஏற்பாடு செய்ததற்கு நன்றி. ஒவ்வொரு நிகழ்வும் முறையாக திட்டமிட்டு அருமையாக நடத்தி உள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். இதன் வாயிலாக, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.
- டாக்டர் நந்தகோபால்,
குடியிருப்பு செயலர்.
பள்ளி தேர்வு நடந்து வருகிறது. இருப்பினும், சரியான திட்டமிடலுடன் 'தினமலர்' நிகழ்ச்சி நடத்துவதால், எங்களால் வீட்டில் இருக்க முடியவில்லை. இதனால், நாங்களும் ஆர்வமுடன் பங்கேற்றோம். இது போன்ற அருமையான நிகழ்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை.
- சுமதி,
குடியிருப்புவாசி.
என் அப்பா காலத்தில் இருந்து 'தினமலர்' வாசகன் நான். தற்போது எனக்கு 67 வயது ஆகிறது. இந்த நிகழ்ச்சி வாயிலாக, அக்கம்பக்கத்தினர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டு, நாங்களும் குழந்தைகளாக மாறி சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டோம்.
- சேகர்,
குடியிருப்புவாசி.
முதன்முறையாக எங்கள் குடியிருப்பில் இது போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. காலை முதல் அனைவரும் உற்சாகமாக உள்ளனர். அனைத்து போட்டிகளிலும், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
- தீபிகா சந்தோஷ்,
குடியிருப்புவாசி.