ADDED : அக் 04, 2024 12:38 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை - -மாலை 4:00 மணி. தாயார் கமல வாகன புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
நவராத்திரி விழாவை முன்னிட்டு கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் கவுரி அலங்கார காட்சி- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஆண்டவர் கோவில்
நவராத்திரியை முன்னிட்டு, மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம்- - மாலை 4:15 மணி. லாஸ்யா நடன நிறுவன மாணவர்களின் பரதநாட்டியம் - -மாலை 6:00 மணி. பேபி திவ்யாவின் பக்திப்பாடல் கச்சேரி- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
காமாட்சி அம்மன் கோவில்
நவராத்திரியை முன்னிட்டு, காமாட்சி அம்மன் சிவலிங்க பூஜை அலங்காரம்- - மாலை 6:30 மணி. பக்தி இசை- - காலை 9:00- முதல் 12:00 மணி வரை. பரதநாட்டியம் மாலை - 3:00 முதல்- 8:00 மணி வரை. இடம்: மாங்காடு.
கோமளீஸ்வரர்
மண்டலாபிஷேகம்- - காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர்.
வடிவுடையம்மன் கோவில்
உற்சவ தாயார் பராசக்தி அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி வலம் வருதல் - இரவு 7:00 மணி. இடம்: திருவொற்றியூர்.
பொன்னியம்மன் கோவில்
உற்சவ தாயார், மகேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளல் - இரவு 7:00 மணி. இடம்: அஜாக்ஸ், திருவொற்றியூர்.
அகிலாண்டேஸ்வரி கோவில்
உற்சவ தாயார், மகேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளல் - மாலை 6:00 மணி. இடம்: சன்னதி தெரு, திருவொற்றியூர்.
அய்யா கோவில்
அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா திருநாமகொடியேற்றம் - காலை 6:30 மணி. இடம்: மணலி புதுநகர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சாந்தநாயகி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கந்தாஸ்ரமம்
தாரா சண்டி மஹா யாகம் - காலை 9:00 மணி. தேங்காய் பூ காப்பு அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: சேலையூர்.
வாராஹி அறச்சபை
மஞ்சள் அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
வேணுகோபால் சுவாமி கோவில்
கோலாட்டம், சமபந்தி விருந்து - மாலை 6:00 மணி முதல். இடம்: மேடவாக்கம்.
வேலியம்மன் கோவில்
சங்கீத நிகழ்ச்சி - இரவு 7:00 மணி. இடம்: ஈ.வெ.ரா., தெரு, கூடுவாஞ்சேரி.
நாகாத்தம்மன் கருமாரியம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
வீராத்தம்மன் கோவில்
திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில் தெரு, ஜல்லடியன்பேட்டை.
பொது
பிறந்த நாள் விழா
தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா ஆகியோரது பிறந்த நாள் விழா - காலை 10:00 மணி. இடம்: தியாகி பார்த்தசாரதி இல்லம், எம்: 12வது தெரு, லேக் ஏரியா, நுங்கம்பாக்கம்.
பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் 14வது பட்டமளிப்பு விழா - காலை 10:30 மணி. இடம்: பட்டமளிப்பு விழா அரங்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை.
நவராத்திரி கொலு கண்காட்சி
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.