/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாம்பாக்கம் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு
/
மாம்பாக்கம் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு
மாம்பாக்கம் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு
மாம்பாக்கம் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு
ADDED : மார் 19, 2025 12:26 AM

சித்தாலப்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சித்தாலப்பாக்கம். இங்கு, 100 ஏக்கர் பரப்பளவில், சித்தாலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கரையை ஒட்டி, மேடவாக்கம்- - மாம்பாக்கம் சாலை அமைந்துள்ளது. இச்சாலை, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையை இணைக்கும் முக்கியமான சாலையாகும். எனவே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையை கடக்கின்றன.
இந்நிலையில், ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில், 1 கி.மீ., துாரத்திற்கு, குப்பை, கட்டடம் மற்றும் இறைச்சி கழிவை கொட்டியுள்ளனர்.
இதனால், அப்பகுதி முழுதும் வீசும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுடன் கடக்கும் நிலை உள்ளது.
தவிர, சிலர் குப்பையில் தீ வைத்து செல்கின்றனர். இதனால் எழும் புகையால், கண் எரிச்சல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும் சூழல் உள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'குப்பை, கழிவை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தொடர்ந்து குப்பை கொட்டாமல் தடுக்க வேண்டியதும், மீறி கொட்டுவோர் மீது அபராதம் விதிப்பதும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தையே சாரும்' என்றார்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குப்பையை அகற்றி, சாலையோரம் குப்பை கொட்டுவோரை கண்டறிய கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.