/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுாறடி சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
நுாறடி சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
நுாறடி சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
நுாறடி சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 12, 2025 12:48 AM

அரும்பாக்கம், கோயம்பேடு - வடபழனியை நோக்கி செல்லும், 100 அடி சாலையில், அரும்பாக்கம், பெரியார் பாதை பகுதி உள்ளது.
இப்பகுதியில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநகர பேருந்து நிறுத்தமும் உள்ளன. நாளொன்றுக்கு, ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், சாலையோரத்தில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாசி படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு தொல்லை அதிகரிப்பதோடு, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியில் நிறுவனம் நடத்துவோர் கூறியதாவது:
பல நாட்களாக, சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, மாநகராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் பலனில்லை. நோய் தொற்று அபாயம் நிலவுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, கழிவுநீரை அகற்றி, மீண்டும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

