/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொறுப்பு அதிகாரி நியமிக்காததால் 5 மண்டலத்தில் சுகாதார பணி பாதிப்பு
/
பொறுப்பு அதிகாரி நியமிக்காததால் 5 மண்டலத்தில் சுகாதார பணி பாதிப்பு
பொறுப்பு அதிகாரி நியமிக்காததால் 5 மண்டலத்தில் சுகாதார பணி பாதிப்பு
பொறுப்பு அதிகாரி நியமிக்காததால் 5 மண்டலத்தில் சுகாதார பணி பாதிப்பு
ADDED : மே 16, 2025 12:15 AM
அடையாறு,;அடையாறு மண்டல சுகாதார அதிகாரி ஷீலா, இவர் தெற்கு வட்டார கூடுதல் மாநகர நல அதிகாரியாக கூடுதலாக பொறுப்பு வகிக்கிறார்.
தெற்கு வட்டாரத்தில், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த சுகாதார அதிகாரி, கடந்த 11ம் தேதி முதல் நீண்ட நாள் விடுப்பில் சென்றுள்ளார்.
பொதுவாக ஒரு அதிகாரி நீண்ட நாள் விடுப்பில் சென்றால், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
இதனால், ஐந்து மண்டலங்களில் சுகாதார நடவடிக்கைகள், மருத்துவமனை கண்காணிப்பு, கொசு ஒழிப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் சரிபார்ப்பு, பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் பதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:
மண்டல சுகாதார அதிகாரி, கூடுதல் மாநகர நல அதிகாரி நீண்ட விடுப்பில் சென்றால், பொறுப்பு அதிகாரி குறித்த விபரம், முந்தின நாள் இரவே எங்களுக்கு வந்து விடும்.
ஐந்து மண்டலங்களுக்கான சுகாதார பொறுப்பு அதிகாரி, இன்னும் நியமிக்கப்படவில்லை. எங்களுக்கு, நேற்று வரை தகவல்களும் வரவில்லை.
யாரிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்க வேண்டும், சுகாதார ஆலோசனை பெற வேண்டும் என்பது தெரியவில்லை. கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளன. உயர் அதிகாரிகள் தலையிட்டு, அதிகாரி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.