/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தகம், மலர் கண்காட்சிக்கு குவிந்தோரால் அண்ணா சாலை - சைதையில் கடும் நெரிசல்

ADDED : ஜன 05, 2025 10:22 PM
சென்னை:செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை,ஒரே நாளில் 14,480 பேர் கண்டு ரசித்தனர்.
தோட்டக்கலைத்துறை வாயிலாக தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில், நான்காவது மலர் கண்காட்சி நடக்கிறது. இங்கு விமானம், கப்பல், ரயில் உட்பட பல்வேறு பொருட்களை, மலர்கள் வாயிலாக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதற்காக, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. விடுமுறை நாளான நேற்று, மலர் கண்காட்சியை 14,480 பேர் கண்டு ரசித்தனர்.
பெரியவர்களிடம் கட்டணமாக, 200 ரூபாயும், சிறியவர்களுக்கு, 150 ரூபாயும் வசூல் செய்யப் பட்டது. இதன் வாயிலாக, தோட்டக்கலைத்துறைக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. மலர் கண்காட்சியில் திரண்டவர்களால், பூங்கா அமைந்துள்ள கதீட்ரல் சாலை, அண்ணாசாலை ஆகியவற்றில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் நந்தனம் ஓய்.எம்.சி.ஏ., வளாகத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு திரண்ட புத்தக பிரியர்களால், அண்ணாசாலையில் சைதாப்பேட்டை வரை கடும் நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் பல கி.மீ., வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.