/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏப்ரல் 2 முதல் கனமழை: வானிலை மையம் தகவல்
/
ஏப்ரல் 2 முதல் கனமழை: வானிலை மையம் தகவல்
ADDED : மார் 31, 2025 10:26 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில், மேல் வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல், 2ல் கோவை மாவட்ட மலை பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்., 3 கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.