ADDED : மார் 05, 2024 12:32 AM

சென்னை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 46வது செயற்குழு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்ததும், பாரா பேட்மின்டன் வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு, தமிழக சாம்பியன்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், 6.19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, உலக தரத்திலான செயற்கை காலை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
மேலும், பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீரர் விஜய்சாரதி, பாரா பேட்மின்டன் வீரர் முகமது இர்பான் ஆகியோருக்கு, தமிழக விளயைாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், ஒப்பந்த அடிப்படையில் நிபுணர் பயிற்றுனர்களுக்கான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளயாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

