/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹெக்சாவேர் பிரீமியர் லீக் கிரிக்கெட் செயின்ட் ஜோசப் கல்லுாரி 'சாம்பியன்'

ADDED : ஆக 22, 2025 12:39 AM

சென்னை, 'ஹெக்சாவேர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி சாம்பியன் கோப்பையை வென்றது.
ஹெக்சாவேர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், பூந்தமல்லி அருகில் பனிமலர் கல்லுாரி வளாகத்தில் பத்து நாட்கள் நடந்தன. போட்டியில், எஸ்.ஆர்.எம்., - பனிமலர், செயின்ட் ஜோசப், சவீதா, ஹெக்சாவேர் லெவன், சி.ஐ.டி., ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று மோதின.
இதன் இறுதி போட்டியில், செயின்ட் ஜோசப் மற்றும் ஹெக்சாவேர் லெவன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் விளையாடிய, ஹெக்சாவேர் லெவன் அணி, 12 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 77 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, செயின்ட் ஜோசப் அணி, 9.4 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 79 ரன்களை அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா, பனிமலர் கல்லுாரியில் நேற்று நடந்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்று, செயின்ட் ஜோசப் கல்லுாரி அணிக்கு கோப்பையை வழங்கினார். அணியுடன், கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் சசிசேகர் கோப்பையை பெற்றார்.