/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹிந்து மகா சபா தலைவர் 'போக்சோ'வில் கைது
/
ஹிந்து மகா சபா தலைவர் 'போக்சோ'வில் கைது
ADDED : அக் 15, 2025 02:21 AM
மாம்பலம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஹிந்து மகா சபா தலைவர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண், அங்கு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கணவருக்கு பிறந்த 13 வயதுடைய மகளை, கோடம்பாக்கத்தில் வசிக்கும் முதல் கணவரின், 43 வயதுடைய தங்கையின் வீட்டில் வளர்ந்து வந்தார்.
சிறுமியின் அத்தை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த அகில பாரத ஹிந்து மகா சபா தலைவரான 'கோடம்பாக்கம் ஸ்ரீ' என்ற ஸ்ரீகண்டன், 54, வீட்டில் பணிபுரிந்துள்ளார். சிறுமியிடம் ஏழ்மை நிலையை கூறி, பாலியல் தொழிலில் தள்ளிய சிறுமியின் அத்தை, ஸ்ரீகண்டனிடமும் அவரை அறிமுகம் செய்துள்ளார்.
ஸ்ரீகண்டன், சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி வேலுார் சென்று நடந்த சம்பவம் குறித்து, தன் தாயிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய், சென்னை வந்து சிறுமியின் அத்தையிடம் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது அவர், சிறுமியின் ஆபாச வீடியோவை காட்டி சிறுமியையும் அவரது தாயையும் மிரட்டி உள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் ஸ்ரீகண்டனை போக்சோ உள்ளிட்ட வழக்குகளில், நேற்று கைது செய்தனர். சிறுமியின் அத்தையும் கைது செய்யப்பட்டார்.