/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென் மாநில கூடைப்பந்து போட்டி ஹிந்துஸ்தான் பல்கலை சாம்பியன்
/
தென் மாநில கூடைப்பந்து போட்டி ஹிந்துஸ்தான் பல்கலை சாம்பியன்
தென் மாநில கூடைப்பந்து போட்டி ஹிந்துஸ்தான் பல்கலை சாம்பியன்
தென் மாநில கூடைப்பந்து போட்டி ஹிந்துஸ்தான் பல்கலை சாம்பியன்
ADDED : ஆக 28, 2025 12:25 AM

சென்னை, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்த, தென் மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில், சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
விஜயவாடாவில் உள்ள பார்வதனேனி பிரமையா சித்தார்த்தா கல்லுாரியில் நடந்த போட்டியில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உட்பட, எட்டு தென் மாநிலங்களைச் சேர்ந்த, பல்கலை அணிகள் பங்கேற்றன.
போட்டி 'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடந்தது. லீக் போட்டியில் அசத்திய, ஹிந்துஸ்தான் பல்கலை அணி, இறுதிப் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஹிந்துஸ்தான் பல்கலை அணி 81-- 46 என்ற புள்ளி கணக்கில் எதிர் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.