ADDED : ஏப் 19, 2025 11:48 PM
சென்னை, 'காருண்யா' நிகர்நிலை பல்கலை வேந்தரும், 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் தலைவரும் 'சீஷா' தொண்டு நிறுவனருமான பால் தினகரன் 'ஈஸ்டர்' வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்ததாவது:
'ஈஸ்டர்' பண்டிகையின்போது, உங்கள் வாழ்வில் நம்பிக்கையும் உயிர்த்தெழுதலும் உண்டாகட்டும். ஈஸ்டர் என்று அழைக்கப்படும் உயிர்த்தெழுதலின் நாளானது, இயேசு மரணத்தின் அதிகாரத்தை ஜெயித்து எழுந்ததை நினைவுகூரும் தினமாகும்.
பெரிய வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு, கல்லறையினுள் வைக்கப்பட்டார். ஆனால், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, அவர் இருளின் வல்லமையை தோற்கடித்தார். பாவம், மரணம் இவற்றின் சங்கிலிகளை உடைத்தார். உயிர்த்தெழுந்த இயேசு இன்று, உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார். வாழ்வில் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்குள் எவ்வளவு ஆழத்தில் நீங்கள் சிக்கியிருந்தாலும், உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்; நம்பிக்கையான எதிர்காலத்தை தருவார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

