/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹிட்டர்ஸ் அணி கிரிக்கெட்டில் வெற்றி
/
ஹிட்டர்ஸ் அணி கிரிக்கெட்டில் வெற்றி
ADDED : மே 23, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைபுளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீ குருராகவேந்திரா கோப்பைக்கான 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள் சேத்துப்பட்டில் நடக்கின்றன. இதில், பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், ஹாரிங்டன் வாரியர்ஸ் மற்றும் ஹிட்டர்ஸ் அணிகள் எதிர்கொண்டன.
டாஸ் வென்ற ஹிட்டர்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த, ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி, 16.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 125 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய, ஹிட்டர்ஸ் அணி, 18.2 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 128 ரன்களை எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்கின்றன.