/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் சென்னையில் இன்று துவக்கம்
/
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் சென்னையில் இன்று துவக்கம்
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் சென்னையில் இன்று துவக்கம்
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் சென்னையில் இன்று துவக்கம்
ADDED : ஜூன் 18, 2025 12:13 AM
சென்னை, ஹாக்கி இந்தியா ஆதரவில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் தொடர், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் இன்று துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.
இத்தொடரில், 20 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் எட்டு அணிகளும் பங்கேற்கின்றன.
ஆடவர் 'ஏ' பிரிவில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, அரை இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதி ஆட்டங்கள், ஜூன் 25-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 27-ம் தேதியும் நடக்கின்றன. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில், 18-ம் தேதி கேரளாவுடன் மோதுகிறது.
அதேபோல், மகளிர் பிரிவில் பங்கேற்றுள்ள எட்டு அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழக அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் ஒடிசா, ஹரியானா, பஞ்சாப் அணிகளும் உள்ளன.
'லீக்' ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 24-ம் தேதியும், அரையிறுதி 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 27-ம் தேதியும் நடக்க உள்ளன.