/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி நடுவர்கள் பயிற்சி துவக்கம்
/
ஹாக்கி நடுவர்கள் பயிற்சி துவக்கம்
ADDED : ஏப் 27, 2025 01:44 AM
சென்னை:ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கம் இணைந்து, தெற்கு மண்டல ஹாக்கி பிரியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் நடுவருக்கான பயிற்சி முகாமை, எழும்பூர், ராதா கிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில்,  துவங்கியன.
முகாம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 25 முதல் 27ம் தேதி வரை ஹாக்கி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 27ல் இருந்து 29ம் தேதி வரை நடுவருக்கான சிறப்பு பயிற்சி நடக்கிறது.
இந்த முகாமில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள், வரும் நாட்களில் நடக்கும் போட்டிகளில் நடுவராகவும், தொழில்நுட்ப ஆலோசகராகவும் பணியாற்ற உள்ளனர்.
ரகுபிராத், அனில்குமார் உள்ளிட்ட முன்னணி பயிற்சியாளர்கள் பலர், பயிற்சி வழங்கி வருகின்றனர்.

