ADDED : ஜூன் 30, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை நுாற்றுக்கணக்கானோர் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர்.
வெள்ளை புலி, காட்டுமாடு, யானை, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை பார்வையிட்ட அவர்கள், சதுப்பு நில மான், அது புதிதாக ஈன்ற மூன்று குட்டிகளையும் கண்டுகளித்தனர். புள்ளி மான்களுக்கு, குழந்தைகள் உணவுவழங்கி மகிழ்ந்தனர்.

