/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராட்சத மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு வீட்டு ஓனருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ADDED : டிச 26, 2025 05:32 AM

முகப்பேர்: முகப்பேரில், கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில், ராட்சத மரம் நேற்று வேரோடு விழுந்ததில், மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீட்டு உரிமையாளருக்கு, மண்டல அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் காலனி பகுதியில், ஒரு வீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி இடத்தை ஒட்டி 50 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று, 5 அடிக்கு பள்ளம் தோண்டும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த மரம் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது.
அப்போது, மரத்தின் எதிரே இருந்த மருத்துவமனையின் பெயர் பலகை மற்றும் கார் சேதமடைந்தது. தவிர, மரத்தை ஒட்டிச் சென்ற மின் கம்பிகள், இணைய கேபிள்கள் அறுந்து விழுந்தன.
இதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், அசம்பாவிதம் தவிர்க்க, உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
தகவலறிந்து வந்த அம்பத்துார் மண்டல ஊழியர்கள், ஒரு மணி நேரம் போராடி, மரத்தை வெட்டி, அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, வீட்டு உரிமையாளருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான 'நோட்டீஸ்' வழங்கினர்.