/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
/
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
ADDED : டிச 26, 2025 05:30 AM

ஆலந்துார்: அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக்கல்லுாரி யின் நாட்டு நலப்பணி திட் ட மாணவியர், 100க்கும் மேற்பட்டோர், ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட நங்கநல்லுார், 166, 167வது வார்டுகளில், ஒரு வார சிறப்பு சேவை முகாம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22ம் தே தி முதல், வரும் 28ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில், நங்கநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், பூங்கா, பிரதான சாலைகளை துாய்மைப்படுத்தி, பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருளுக்கு ஏதிரான பேரணியை, நேற்று நடத்தினர்.
நங்கநல்லுார் 100 அடி சாலையில் இருந்து, 100க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவியர், பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்று, போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

